40,000 மெற்றிக் தொன்களுக்கும் அதிகமான MOP உரத்தை ஏற்றிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் 41,678 மெற்றிக் தொன் உர தொகையை ஏற்றிக்கொண்டு நேற்று (02) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், உரம் இறக்கும் பணி இன்று (03) பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் 16,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் ஒன்றும் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள யூரியா உரத்தின் இருப்புக்களை இறக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.