இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்கள் மாத்திரம் போதாது.. அரசியல் சீர்திருத்தங்களும் வேண்டும்.. -சமந்தா பவர்
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்கள் மாத்திரம் போதாது, அரசியல் சீர்திருத்தங்களும் தேவை என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர்நிலைய தலைவர் திருமதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தேவையான சீர்திருத்தங்களை நன்கு புரிந்து கொள்வதற்காக இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக