அதிகரித்த மரக்கறிகளின் விலை

அதிகரித்த மரக்கறிகளின் விலை

 நுவரெலியாவில் சில மரக்கறிகளின் சில்லறை விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 250 முதல் 280 ரூபா வரை உள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விற்பனை விலை 300 முதல் 330 ரூபா வரை உள்ளது.

அத்துடன் நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோவின் மொத்த விலை 370 முதல் 380 ரூபாவாகும்.

 தம்புள்ளை விஷேட பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று (13ஆம் திகதி) பல வகையான மரக்கறிகளின் மொத்த விலை பட்டியல்

முட்டைகோஸ் ரூ.100-110,

கோவா ரூ.550-580,

பீட்ரூட் (மலைநாடு) ரூ.200-250,

தக்காளி ரூ.110-130,

நோகோல் ரூ.200-220,

பீர்க்கங்காய் ரூ.200-210,

பயற்றங்காய் ரூ.180. – 200.

 கடந்த சில நாட்களாக ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 150 ரூபாவாக குறைந்திருந்த போதிலும், தற்போது ஒரு கிலோவின் விலை 300 ரூபாவாக அதிகரித்துள்ளது.

 ஒரு கிலோ செத்தல் மிளகாய் மொத்த விற்பனை விலை 1750 ரூபாவாகும். இதேவேளை, ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் சில்லறை விலையும் 150 ரூபாவாக அதிகரித்துள்ளது.

 தினசரி காய்கறிகளின்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால் விலை உயர்ந்துள்ளதாக பொருளாதார மைய அதிகாரிகள் கூறுகின்றனர். 

கருத்துகள்