அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாவலி ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

60 மற்றும் 70 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும், சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மீரிகம ஹொரகெலே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத மற்றுமொரு ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.