கம்பஹா உடுகொட அரபா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை ஊக்குவித்து பரிசில்கள் வழங்கிய நிகழ்வு அதிபர் எம்.ஏ.எம். அஸாம் தலைமையில் இடம்பெற்றது. 
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நேற்று (14) இடம்பெற்ற இந்நிகழ்வில் தரம் ஐந்து மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். 
தரம் ஐந்து மாணவன் எம்.ஐ.எம்.மிஷாரியின் கிராத் ஓதலுடன் ஆரம்பமான இந்நிகழ்வின் தலைமை உரையை அதிபர் எம்.ஏ.எம்.அஸாம் நிகழ்த்தினார். 
அதனைத் தொடர்ந்து வகுப்பாசிரியர் எம்.ஜே.ரிஹானாவின் உரையைத் தொடர்ந்து  எதிர்வரும் 18ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 40 மாணவர்களை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசில்களையும் வழங்கினர். 
அதிபர் எம் ஏ எம் அஸாம், உப அதிபர் எம் ஐ அஸ்மீன், வகுப்பாசிரியை எம் ஜே ரிஹானா,உதவி ஆசிரியை பஸ்னா உட்பட மேலும் பலரும் பரிசில்களை வழங்கினர்.

இம்மாணவர்களுக்கான பரிசுப் பொதியை சியன மற்றும் நியூஸ் பிளஸ் ஊடகவலையமைப்பின் ஊடகவியலாளரும், தரம் ஐந்து மாணவன் ஸாஹித் ஸமீரின் தாயாருமான ஹிமாயா ஹமீட் தனது நண்பர்களின் உதவியுடன் பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரிசளிப்பு விழாவின் இறுதியாக தரம் ஐந்து மாணவனான ஸாஹித் ஸமீர் நன்றியுரை நிகழ்த்தினார். தரம் ஐந்து மாணவிகள் ஒருசிலரின் ஸலவாத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.


தொகுப்பு மற்றும் படங்கள்
ஹிமாயா ஹமீட் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.