வியட்நாம் கடற்பகுதியில் சிக்கியிருந்த 152 இலங்கையர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் நேற்று (27) இரவு விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வியட்நாம் கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, படகு மூலம் நாட்டை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று மீட்கப்பட்டது.
அங்கு 303 பேர் இருந்தனர் அவர்களில் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த 152 பேர் நேற்றிரவு இந்த நாட்டை வந்தடைந்தனர்.