பல்கலைக்கழகங்களில் வன்முறைகள் அதிகரிப்பதற்கு கொரோனா வைரஸின் போது நிகழ்நிலை கல்வி முறையும் மாணவர்களின் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளமையும் முக்கிய காரணம் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

 அந்தக் காலக்கட்டத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்த மாணவர்கள், மீண்டும் பல்கலைக்கழகங்களுக்கு வந்த பிறகு மன உளைச்சலில் இருந்து விடுபட வன்முறையில் ஈடுபட்டிருப்பது உளவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தத்துவம் மற்றும் உளவியல் துறையின் மூத்த பேராசிரியர் ஞானதாச பெரேரா தெரிவித்துள்ளார். 

 
 அந்த நிலையில் இருந்து மாணவர்களை காப்பாற்ற அனைத்து தரப்பினரின் தலையீடும் இன்றியமையாதது என சிரேஷ்ட பேராசிரியர் ஞானதாச பெரேரா சுட்டிக்காட்டினார்.

 கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் பேராசிரியர் மொஹமட் மகிஷ் அவர்களும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

 பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்னவை மாணவர்கள் குழுவொன்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் சமூகத்தில் மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது.  இது தொடர்பான சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 12 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராதனை பல்கலைகழக பேராசிரியர்கள் விரிவுரைகளில் இருந்து விலகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.