மீண்டும்  மருந்துகளின் விலைகள் அதிகரிக்குமா?

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் அனைத்து மருந்துபொருட்களின் விலைகளும் அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் விலைகள் அதிகரிக்கப்படலாம்.பல வருடங்களா அரசமருந்தாக்கற் கூட்டுத்தாபனம மக்களிற்கு  குறைந்த விலைக்கு மருந்துகளை வழங்கிவருகின்றது.

இந்த நிலையில் 80 வீதமான மருந்துகளின் கையிருப்புகள் முடிவடைந்துவிட்டதாகவும் இதனால் பொதுமக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் .தற்போதைய நாணயமாற்று விகிதத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை ஏழு எட்டு மாதங்களிற்கு முன்னர் வழங்கிய விலைக்கு வழங்க முடியாது என அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் தினுசா தசநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக நாணயமாற்றுவீதம்  மாற்றமடைந்துள்ளது டொலர் தற்போது 360 ரூபாயாக காணப்படுகின்றது இதன் காரணமாக நாங்கள்  இறக்குமதி செய்யும்; மருந்துகளின் விலைகள் மாற்றமடையும் என என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பல வருடங்களாக எங்களிற்கு விநியோகம் செய்கின்ற உற்பத்தியாளர்களே  தொடர்ந்தும் விநியோகிக்க உள்ளதால் சந்தையில் எங்களின் மருந்துகள் தொடர்ந்தும் மலிவாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.