நப்லா ஸலாஹுத்தீன் நாவலப்பிட்டியை  பிறப்பிடமாகக் கொண்டவர். வசிப்பிடம் கண்டி.  தந்தை  சலாஹுத்தீன். தாய் நஜியா. இவர் எழுத்து துறையை பின்னணியாக கொண்டவரல்ல. ஆனாலும் கல்வி ,  ஆற்றல் ,  ஊக்குவிப்பு போன்றன  இவரது பின்னணியில் அமைந்திருந்தது. இவரது கணவர் பஸ்லி பாரூக், ஒரு வைத்தியர். தற்போது நப்லா மூன்று பிள்ளைகளுக்கு தாயாக இருக்கிறார். மூவரும் மிகவும் சிறிய வயதை கொண்ட மகன்மார். 

இவர் தனது ஆரம்பக் கல்வியை கம்பளை international school இலும் இன் மேற்படிப்பு வரை கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். 

Diploma in child phycology மற்றும் Diploma in pre school teacher training போன்ற மேலதிக கற்கைகளை பூர்த்தி செய்த இவர், Bsc in pshycology பட்டப்படிப்பை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மூலம் கற்கையை தொடர்ந்து கொண்டும் இருக்கிறார். 
சிறுவயது முதலில் வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் ஆர்வம் கொண்ட இவர் பல பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். எழுத்து போட்டிகளிலும் பங்கு பற்றி உள்ளார். இதன் மூலம் இவரது ஊக்குவிப்பு வளர்ந்தது தன்னைத் தானே வளர்த்துக் கொள்வதில் இவர் பெரிதும் பாடுபட்டுள்ளார். இவரது பெற்றோரும் தனக்கு  பக்க பலமாக இருந்துள்ளதாக இவர் தெரிவிக்கின்றார். 

கூடுதலாக கட்டுரை போன்ற ஆக்கங்கள் தான் சமூகத்திற்கு கொடுத்தும் உள்ளார். இன்னும் பல எழுத்துக்களை சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று பேரார்வம் கொண்டவர். தனது எழுத்தின் மூலம் சமூகப் பணி புரிய வேண்டும் என்பதில் உறுதியாகவும் இருக்கின்றார். 

இவர் வெளியிட்ட முதல் நூல் "simple as that " இன்னும் நூலாகும். இதன் தமிழ் மொழிபெயர்ப்பும் "எளிதிலும் எளிது" எனும் பெயரில் கிடைக்கப்பெறுகின்றது. இதனை மொழி பெயர்த்தவர் அரும்பு ஆசிரியர் ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்கள். 


இந்த நூலில் முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் அவர்களது குடும்ப வாழ்க்கையின் அடித்தளங்கள் பற்றி பூரண விளக்கமும் தெளிவும் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. 

சிறுவர் கதை புத்தகங்களாகிய "hajara counts her blessings" மற்றும் "The crown and the robe" போன்ற அழகிய புத்தகங்களை சிறுவர்களுக்காகவென்றே சமூகத்திற்கு கொடுத்துள்ளார். 

அவரது புதிய படைப்பாக " The hadees nest" புத்தகம் விளங்குகிறது இது முஸ்லிம் சிறார்களுக்கான மார்க்க பயிற்சி வழிகாட்டி நூலாக அமைந்துள்ளது. இதன் தமிழ் வடிவமும் "ஹதீஸ் பேழை" என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. 
தனது குடும்பத்தின் ஆதரவு இவரது எழுத்துலக பயணத்தில் பெரும் உறுதுணையாக அமைந்துள்ளது. திருமணத்தின் முன் தந்தை தாய் மற்றும் சகோதரர்கள் மூவர் என இவருக்கு பின்புலமாக இருந்திருக்கின்றனர். திருமணத்தின் பின் கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் என இவரைச் சுற்றிலும் ஆதரவுகள் பெரிதும் கிடைத்துள்ளன. இதன் மூலம் திருப்திகரமான நல்ல படைப்புகளை வெளியிடவும் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. என்பதையும் அவர் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றார்.  

முதலில் எழுத்தாளராகவும் பின் நூலாசிரியராகவும் அதற்குப் பின் புத்தக வெளியீட்டாளராகவும் அடையாளம் காணப்படும் இவர், சிறுவர்களுக்கான சித்திரக் கதை புத்தகங்கள் மற்றும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய தரம் வாய்ந்த படைப்புகளை சமூகத்திற்கு தர வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு "Bloom publication" என்னும் நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளார். இதன் மூலம் தரமான படைப்புகளை இலங்கையில் மட்டுமின்றி சர்வதேசத்திலும் தனது புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இன்னும் நிறைய நிறைய நல்ல தரமான புத்தகங்களை சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கடமைப்பாட்டுடன் காணப்படுகின்றார்.

  எழுத்து என்பது ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெற்றிருக்கும் ஓர் அறிய பண்பு கிடைத்தவர்கள் கட்டாயம் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தொடர்ந்து எழுதுங்கள் எழுத எழுத பட்டை தீட்டப்படும் ரத்தினமாக மாற முடியும் என்றும் நிறைய வாசிப்பதன் மூலம் எழுத்துக்களை நல்ல முறையில் எழுத முடியும் 

என்றும் இவர் கூறுகிறார். எழுத்துக்களை எழுதுவதின்  மூலம் ஒரு நூலாசிரியராக ஆக முடியும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் தனது வாசகர்களுக்கு கூறிக் கொள்ளும் இவர்,  உலகத்தில் இருந்து விடைபெறும் தருணம் வரையிலும் பிறர் பயன்பட எழுத்தால் முடிந்த வரை உலகுக்கு, சமுதாயத்துக்கு சிறந்ததை விட்டுச் செல்லுங்கள் என்றும் தெரிவிக்கின்றார். 

அவரது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...!! 
அவரது ஆக்கங்களை பார்வையிட 
https://www.facebook.com/BloomPublicationssl/

Facebook : http://www.Facebook.com/authornafla 

Instagram : 
@nafla.salahudeenauthor 

நேர்காணல் மற்றும் தொகுப்பு 
Fayasa Fasil 
Kahatowita

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.