இந்தியா வழங்கும் கடன் உதவி வசதியின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மை இறக்குமதி செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கு முன்னர் தற்போது கைவசமுள்ள மை காலாவதியாகி விட்டதா என பரிசோதிக்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக அறிவித்துள்ளது.

முந்தைய ஆண்டுகளில் மை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், இறுதியாக 2020 தேர்தலுக்காக உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து மை கொள்வனவு செய்யப்பட்டது.

இதேவேளை இந்திய வழங்கிய கடனுதவியின் கீழ் மருந்துகளை முறையாக பெற்றுக்கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.