ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்குமென அந்நாட்டின் உயர் கல்வி அமைச்சர் வௌியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே பெரும்பாலான இடைநிலை பாடசாலைகளிலிருந்து பெண்கள் விலக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடையானது அவர்களின் கல்வியை மேலும் கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான பெண்கள், பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சையில் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.