கடந்த காலத்தில் பரவிய கோவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது டாக்டர் சன்ன பெரேரா மற்றும் பேராசிரியர் மெத்திகா விதானகே ஆகியோரே என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பாக அமைச்சர்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், உலக சுகாதார ஸ்தாபனம் கோவிட் தொற்றினால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்பதாயின், ஏனைய நாடுகளில் அவ்வாறு செய்யாதமலிருப்பது நாம் எம்மை ஒரு பிலேச்ச நாடாக உலகுக்கு தென்படும் என்ற கருத்து இருந்தது. கொவிட் பூதவுடல்களை அடக்கம் செய்தால் அதனுள் உள்ள வைரஸ் பல கோடி வருடங்களின் பின்னும்  மண்ணை உடைத்துக்கொண்டு வெளிவருமென்று ஊடகங்களுக்கு தெரிவித்தது மெத்திகா விதானகே எனத் தெரிவித்த அமைச்சர், ஆனால் 11ஆம் ஆண்டு பாடப் புத்தகத்தைப் பார்த்தால் வைரஸ் ஒன்று 24 மணி நேரத்திற்கு மாத்திரமே உயிருள்ள ஒரு கிருமியாக இருக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.