ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையை தவறாக வழிநடத்தி இந்திய நிறுவனம் ஒன்றின் இருபத்தேழு வகையான மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் வசதிகளின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது அமைச்சரவையின் ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

கடன் வசதியின் கீழ் இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பான அனைத்து எழுத்து மூலமான ஆதாரங்களும் எதிர்வரும் இரு தினங்களில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்த அவர், இது தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் வன்மையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.