தற்போதைய நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகையில் 24 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையில் விழுந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில், கடந்த 2021 ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 11% பேர், அதாவது 24 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறுமை நிலையை எதிர்க்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெருக்கடியின் தொடக்கத்தில் ஏழ்மையான குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் கிட்டத்தட்ட பாதியை இழந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்குடும்பங்கள் தமது சொத்துக்களை விற்று கடனாளிகளாக ஆகியுள்ள நிலையில், அவர்களின் உணவு வேளையை குறைத்து, பிள்ளைகளின் பாடசாலை போக்குவரத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் 26%, அதாவது 57 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த நாட்டில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

மேலும், இந்த நெருக்கடி 3.45 மில்லியனுக்கும் அதிகமான விவசாய மக்களையும், 2.43 மில்லியனுக்கும் அதிகமான ஊட்டச்சத்து தேவையுள்ள மக்களையும், அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படும் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.