நிந்தவூரில் பி.எச்.அப்துல் ஹமீத் கலந்து கொண்ட  "இளைஞர் வழிகாட்டல்" மாநாடு

இளைய தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட  இளைஞர் வழிகாட்டல் மாநாடு (03) சனிக்கிழமை நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூரின் பங்களிப்புடன் அஸ்ஸெய்யத் றஸ்மி மௌலானாவின்ஒருங்கமைப்பில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீமின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ்கூறு நல்லுலகில் அன்புக்குரிய ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் பிரதம அதிதியாகவும் பிரதம பேச்சாளராகவும் கலந்து கொண்டார்.

அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அக்ரம் நூராமித் விசேட உரை நிகழ்த்தினார்.

இதன்போது உலக அறிவிப்பாளர்  பி. எச். அப்துல் ஹமீத் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு,  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அக்ரம் நூராமித் நினைவுச்சின்னம் வழங்கியும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டார்.

அதிபரும் அறிவிப்பாளருமான மர்ஹும் ஏ.ஆர்.எம் ஜிப்ரி நடாத்திய "அறிவுக்களஞ்சியம்" நிகழ்ச்சி தொகுப்பின் நூல் வெளியீடும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி ஜெகதீஸ்வரன், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எப்.எச்.ஏ.சிப்லி அஹமட், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபா,  தாருஸ்ஸபா இயக்குனர் மௌலவி முகம்மது ஸபானிஷ், முஸ்லிம் கலாசார பிரதிப் பணிப்பாளர் அன்வர் அலி, சட்டத்தரணி மர்சூம் மௌலானா, அல் - அஷ்ரக்  தேசிய பாடசாலையின் அபிவிருத்திச்சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் முகாமைத்துவ குழு செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதி உதவி கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப். எம். இன் பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.