அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

விபத்தில் மூளைச்சாவு அடைந்த  பெண்ணின்  உடல் உறுப்புகளை தானம் செய்ய  இந்த பெரும் துயரத்திலும் அவரது மகள்கள் முன்வந்துள்ளனர்.  

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி வித்யா (42). இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார்.  இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று வித்யா தனது மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது 

இந்நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அவர்கள் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து மருத்துவர்கள் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

வித்யாவிடம் இருந்து கண், நுரையீரல், இருதயம், சிறுநீரகம், தோல்  மற்றும் எலும்பு ஆகியவற்றை தானமாக பெற்றனர். இதனை சென்னை மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.