ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று (11) நடைபெறவுள்ளது.

பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் கட்சியின் மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இதில் சுமார் 25,000 பேர் பங்கேற்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.