ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்புடன் ஒப்பநோக்குவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகளை தயாரித்து தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, சந்தேகத்திற்கிடமான நபர்களின் தகவல்களை உடனடியாக சரிபார்க்க இதன் மூலம் முடியும். இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (28) கைச்சாத்திடப்பட்டது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மகேந்திர குமாரசிங்க, பணிப்பாளர் சபை உறுப்பினர் ஜெஃப் குணவர்தன, ஆட்கள் பதிவு ஆணையாளர் வியானி குணதிலக்க ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.