(அஷ்ரப் ஏ.சமத்)

புத்தளத்தில் உள்ள மேர்சி தொழிற்பயிற்சிக் கல்லுாாியில் கடந்த 3 வருட காலத்தில் தொழில்நுட்பப் பயிற்சி கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூரத்தி செய்த 200 மாணவா்களுக்கு NVQ 3 சான்றிதழ்கள் வழங்கும் வைபவம்  நேற்று 07 ஆம் திகதி  BMICH இல்,  கல்லுாாியின் அதிபா் சிஹாம் கரீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாயிஸ் முஸ்தபா கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தாா். அத்துடன் கௌரவ அதிதிகளாக  முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் அன்ஸாா் இப்றாஹீம்,  தொழில்நுட்பக் கல்வி திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளா் எம்.குவைஸ், வெளிநாட்டு அமை்சின் அரச சாா்பற்ற நிறுவனங்களின் பொறுப்பான  பணிப்பாளா் சஞ்சீவ விமலரத்தின, சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மற்றும் மேரிசி லங்கா நிறுவனத்தின் அதிகாரிகள்.  போதனாசிரியா்கள், பெற்றோா்களும் கலந்து சிறப்பித்தனா்

இந் நிகழ்வில்  உரையாற்றிய அரச தொழில்நுட்பக் கல்வித் திணைக்களத்தின பணிப்பாளா் முகைஸ்  -  புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவ மாணவா்களுக்கு வீடுகளில் தங்கியிருக்காமல் வெளிநாடுகள் உள்நாடுகளில் தொழில் பயிற்சியாளராக சிறந்து விளங்குவதற்காக கணினிக் கல்வி, இலக்ரிக்கல், ஓட்டோ மொபையில், ஓட்டுனா் போன்ற பயிற்சிகளைப் பயின்று அதனை NVQ 4 அல்லது 7 வரையில் பட்டதாரிகளாக வருவதற்கும் இலங்கையில் 38 தொழில்நுட்ப கல்லூரிகளும் ரத்மலனையில் தொழில்நுட்ப பல்கலைக்கழகமுப் உள்ளது. 

தமது தொழில் மேலும் அபிவிருத்தி செய்து வெளிநாடுகளில் உள்நாடுகளில சிறந்த சம்பளத்தினையும், சொந்தமாக  வேலைத்தளங்களையும் நிறுவ முடியும் எனக் கூறினாா்.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.