FIFA 2022 ; இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளும் சம்பவங்களும்!

FIFA 2022 ; இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளும் சம்பவங்களும்! 

கத்தாரில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகள் மற்றும் சம்பவங்கள்! 

தற்போது கத்தாரில் நடைபெற்று கொண்டு இருக்கும் உலக கிண்ண கால்பந்து திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் பல சாதனைகள் மற்றும் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இவ் விடயங்களை ஒரே பார்வையில் உங்களுக்கு தருகின்றோம்.

1. உலக கிண்ண வரலாற்றில் அரையிறுதி போட்டிக்கு முதன் முதலாக ஆப்பிரிக்கா நாடாக மொரோக்கோ இடம்பெற்றுள்ளது.. 

2. ஐந்து பிபா (FIFA ) உலகக் கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018 மற்றும் 2022) கோல் அடித்த முதல் வீரராக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பிடித்துள்ளார்.

3. ஸ்பெயின் அணி கோஸ்டாரிகா அணியை 7-0 எனும் கோல் கணக்கில் வென்றது, இதுவே இதுவரை அதிக கோல் வித்தியாசத்தில் பதிவான சிறந்த வெற்றியாக உள்ளது.

4. முதல் சுற்றில் பலம் பொருந்திய ஆர்ஜென்டினா அணியை தர வரிசையில் கீழ் நிலையில் உள்ள சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வரலாறு படைத்தது.

5. உலக கிண்ண கால்பந்து போட்டியை ஏற்று நடாத்தும் நாடு முதல் போட்டியில் தோல்வியடைந்தது இதுவே முதல் தடவையாகும், ஈக்வடார் மற்றும் கத்தார் ஆகிய அணிகள் மோதிய முதல் போட்டியில் கத்தார் 2:0 என தோல்வியடைந்திருந்தது.

6. உலக கிண்ண வரலாற்றில் அது கூடிய தடவைகள் சம நிலையில் போட்டியை முடித்த அணியாக இங்கிலாந்து உள்ளது, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய போட்டியானது சமநிலையில் முடிந்த நிலையிலே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

7. இதுவரை ஒரே ஒரு 'ஹாட்ரிக்' கோல் மட்டுமே பதிவாகியுள்ளது, சுவிட்சர்லாந்துக்கு எதிரான 'சுற்று-16' போட்டியில் போர்த்துக்கல் வீரர் ரமோஸ் இந்த 'ஹாட்ரிக்' சாதனையை படைத்தார்.

8. ஆண்கள் உலக கிண்ண கால்பந்து வரலாற்றில் முதலாவது பெண் நடுவர் என்ற சாதனை, ஜெர்மனி கோஸ்டாரிகாவுடன் மோதிய போட்டியில் நடுவராகப் பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையை ஸ்டெபானி ஃப்ராபார்ட் பெற்றார்.

9. போர்த்துக்களின் பெபே இம்முறை கோல் அடித்த அதிக வயதான வீரர் ஆவார் (39 ஆண்டு, 283 நாட்கள்), சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த கோல் உடன் இந்த சாதனை பதிவாகியுள்ளது.

10. ஸ்பெயினின் பாப்லோ காவி இம்முறை கோல் அடித்த இளம் வயது வீரராக உள்ளார் (18 ஆண்டு, 109 நாட்கள்). கோஸ்டாரிகா அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த கோல் உடன் இந்த சாதனை பதிவாகியுள்ளது

கருத்துகள்