FIFA 2022 : “நொக்கவுட்” சுற்றில் மோதப்போகும் அணிகள் எவை?

 முழுமையான விபரம்👇

▪️கட்டாரில் கடந்த 20ஆம் திகதி முதல் FIFA 2022 உலகக்கிண்ண காற்பந்தாட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

▪️குழு சுற்றில் 32 அணிகள், ஒரு குழுவுக்கு 4 அணிகள் வீதம், 8 குழுக்களாக பிரிக்கப்பட்டன. இதில், குழுக்களில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், காலிறுதிக்கு முந்தைய சுற்றான, நொக்கவுட் 16இல் மோதிக்கொள்ளும்.

▪️இந்நிலையில், குழு சுற்று போட்டிகள் நேற்றோடு நிறைவடைந்தன. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளான அர்ஜென்டீனா, ஜேர்மன், ஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துகல், பிரேசில் ஆகிய அணிகள் குரூப் சுற்றில் தலா 1 தோல்வியை சந்தித்துள்ளன. ஆனால், ஜேர்மனைத் தவிர மேல குறிப்பிட்ட ஏனைய அணிகள் அனைத்தும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றவிட்டன.

▪️குரூப் சுற்றில், எந்த ஒரு அணியும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை. நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் மட்டும் இரண்டு போட்டிகளை வென்று, ஒரு போட்டியை சமநிலை செய்தது. அமெரிக்கா ஒரு போட்டியை வென்று இரண்டு போட்டிகளை சமநிலை செய்தது. இந்த மூன்று அணிகள் மட்டுமே குரூப் சுற்றுகளில் தோல்வியே காணாத அணிகளாகும்.

🔶நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்ற அணிகள்

நெதர்லாந்து, அமெரிக்கா, ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், போலந்து, இங்கிலாந்து, செனகல், ஜப்பான், குரோஷியா, பிரேசில், தென் கொரியா, மொரோக்கோ, ஸ்பெயின், போர்த்துகல், சுவிட்ஸர்லாந்து.

நொக்கவுட் சுற்று 16 பலப்பரீட்சை (அனைத்தும் இலங்கை நேரப்படி)

🔸நெதர்லாந்து vs அமெரிக்கா – இன்று (3) இரவு 8.30 மணிக்கு

🔸ஆர்ஜென்டினா vs அவுஸ்திரேலியா – நாளை (4) நள்ளிரவு 12.30 மணிக்கு

🔸பிரான்ஸ் vs போலந்து – நாளை (4) இரவு 8.30 மணிக்கு

🔸செனகல் vs இங்கிலாந்து – டிசம்பர் 5 நள்ளிரவு 12.30 மணிக்கு

🔸ஜப்பான் vs குரோஷியா – டிசம்பர் 5 இரவு 8.30 மணிக்கு

🔸தென் கொரியா vs பிரேசில் – டிசம்பர் 6 நள்ளிரவு 12.30 மணிக்கு

🔸மொராக்கோ vs ஸ்பெயின் – டிசம்பர் 6 இரவு 8.30 மணிக்கு

🔸போர்த்துகல் vs சுவிட்ஸர்லாந்து – டிசம்பர் 7 நள்ளிரவு 12.30 மணிக்கு

இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

 தோல்வி பெறும் அணிகள் நேரடியாக வெளியேறும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.