ஜஃப்னா கிங்ஸ் 24 ஓட்டங்களால் வெற்றி

எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியுடன் இடம்பெற்ற இன்றைய போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் சொயிப் மலிக் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 30 ஓட்டங்களை பெற்றனர்.

இந்தநிலையில், 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்து வீச்சில் ஜஃப்னா கிங்ஸ் அணி சார்பாக பினுர பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.