Galle Gladiators மற்றும் Kandy Falcons அணிகளுக்கு இடையிலான LPL போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Galle Gladiators முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் Galle Gladiators அணி சார்ப்பில் தனுக தபேர 70 ஓட்டங்களையும் நுவனிந்து பெர்ணான்டோ 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சி கார்லேஸ் பிரத்வைட் 3 விக்கெட்களையும் இசுறு உதான 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் Kandy Falcons அணிக்கு 154 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Kandy Falcons அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் Kandy Falcons அணி சார்ப்பில் அசேன் பண்டார ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதனடிப்படையில் Galle Gladiators அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.