கஹட்டோவிட்ட Wonder Kids பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் நேற்றைய தினம் (10) நடைபெற்றது.
ஷம்ஸ் மற்றும் நஜ்ம் ஆகிய இல்லங்களுக்கிடையில் போட்டிகள் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.
நிகழ்வில் அதிதிகளாக கம்பஹா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் அஸ்ஹர் சேர், சட்டத்தரணி அஸ்லம், நவ லங்கா நிதஹஸ் பக்ஷய கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் ருஷ்தி உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அறிவிப்பாளராக பூகொடை, குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர் இக்பால் நாஸர் கலந்து சிறப்பித்ததுடன் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக