உலக கத்தோலிக்கர்களின் தலைவரான புனித பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் சிகிச்சை பலன் இன்றி கடந்த 31ஆம் திகதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. அவரது உடல் வத்திக்கான் அரண்மனையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அங்கு இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

5 நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட புனித பாப்பரசர் 16 ஆம் பெனடிக்டின் இறுதி சடங்குகள் இன்று இடம்பெறுகின்றன.

அடக்க திருப்பலிக்கு பின்னர் அவரது உடல், சைப்ரஸ் மர பெட்டிக்குள் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. அந்த பெட்டிக்குள் புனித பாப்பரசர் சின்னம், அவரது உருவம் பொறித்த பதக்கங்கள் உள்ளிட்டவையும் வைக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.