கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை (07) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  அறிவித்துள்ளது.

அந்த வகையில, சனிக்கிழமை மாலை 04.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (8)  இரவு 10.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.