பாடசாலைகளில் தரம் 02 முதல் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய பொறிமுறையை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனினும், 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்தல் புதிய பொறிமுறைக்குள் உள்வாங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 01 முதல் 05 வரையான வகுப்புகளுக்கு தற்போது அதிகபட்சமாக 40 மாணவர்கள் மற்றும் தரம் 07 முதல் 11 வரையான வகுப்புகளுக்கு அதிகபட்சம் 45 மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் காணப்படும் சுற்றறிக்கையை மேலும் ஒழுங்குமுறைப்படுத்தி, இடைவகுப்புகளுக்கு பாடசாலைகளை மாற்றுதல் தொடர்பில் உண்மையான காரணங்களை கண்டறிந்து , அனைத்து மாணவர்களுக்கும் நீதியான முறையில் சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் புதிய பொறிமுறை தயார் செய்யப்படவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.