மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தில் கவியரசியும் அதிபருமான திருமதி எஸ். ஏ. இஸ்மத் பாத்திமா அதிபராக இயங்கிக் கொண்டிருக்கும் எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 
2022 தரம் 5 புலமைப் பரீட்சையில் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 04 பேர் சித்தி!

 பாடசாலையிலிருந்து பரீட்சை எழுதிய 26 மாணவர்களில் நான்கு பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.. 

S.F. MANHA.           152
M.M.A. WALEEDH   151  
M. R.F. MANAL.       147
M-R. HAFSA.            145


 இந்த நான்கு மாணவர்களுக்கும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்த ஆசிரியை திருமதி. M.N.P. HASNA ஆவார். இது தவிர இன்னும் பல ஆசிரிய ஆசிரியைகளும் இந்த மாணவர்களுக்காக பாடுபட்டமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை. வரலாற்றில் ஒரே தடவையில் நான்கு மாணவர்கள் சித்தியடைந்தமை இதுவே முதற் தடவையாகும். 
பாடசாலைக்கு இந்தப் பெறுபேற்றினை பெற அருள் புரிந்த இறைவனுக்கும் கடமையாற்றிய அனைத்து ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், கல்விப் பணிமனை, உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர் அனைவர்களுக்கும் பாடசாலை சார்பாக பாராட்டுக்களையும் நன்றிகளையும் அதிபர் அவர்கள் தெரிவித்துக்கொள்கிறார்கள். 

கடந்த 26/01/2023 அன்று பாடசாலையில் அதிபர் திருமதி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா தலைமையில்  நடைபெற்ற 'Language Day -2022' மொழிகள் தினத்தின் போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷேய்க் எம்.எச்.எம்.புஹாரி அதிபர் மற்றும் வகுப்பாசிரியை திருமதி எம்.என்.பி.ஹஸ்னா ஆகியோர் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுக் காணலாம்.

26 மாணவர்கள் பரீடசைக்கு விண்ணப்பித்து பரீட்சையை எழுதி நூற்றுக்கு மேல் 17 மாணவர்கள் எழுபது புள்ளிகளுக்கு மேல் 23 மாணவர்களும் பெற்றமை சிறந்த பதிவாக அமைகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.