னுராதபுரம் தொடக்கம் வவுனியா வரையிலான ரயில் பாதை இன்று(05) முதல் எதிர்வரும் 05 மாத காலத்திற்கு மூடப்படவுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக இவ்வாறு மூடப்படவுள்ளது.

குறித்த புனரமைப்பு பணிகளுக்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் சுமார் 33 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த புனரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அனுராதபுரம் வரை ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் ஏற்றிச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.