கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் 50 பிராந்திய அலுவலகங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் தவிர ஏனைய இடங்களில் கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்வதற்காக 50 புதிய அலுவலகங்கள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில், எந்தவொரு விண்ணப்பதாரரும் குறித்த பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று புகைப்படங்கள் மற்றும் விபரங்களை அதிகாரிகளிடம் கொடுத்து, தங்கள் கடவுச்சீட்டை வீட்டு வாசலில் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பமும் கிடைக்கும்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உரிமையாளரின் சுயவிபரம் உள்ளடக்கிய இலத்திரனியல் அட்டை கொண்ட மின் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதுடன் அது உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்படுகின்றது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.