பாகிஸ்தானில் 50 வயது மருத்துவர் ஒருவருக்கு 60 வது குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ள நிலையில், தற்போது 4 வது முறையாக திருமணம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் கியுயேட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜேன் முகமது. 50 வயதான இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது 60 வது முறையாக தந்தையாகியுள்ளார்.
இவருக்கு புத்தாண்டையொட்டி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு குஷால் கான் எனப் பெயரிட்டுள்ளார். அவருக்கு 60 பிறந்த குழந்தைகளில் 5 பேர் இறந்துள்ளனர்.
ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ள நிலையில், தற்போது 4 வது முறையாக திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தனது ஆசை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.