பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த 664 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் பதவியில் இருந்து பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு 03 உத்தியோகத்தர்களும், உப பொலிஸ் பரிசோதகர் பதவியில் இருந்து பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு 41 உத்தியோகத்தர்களும் பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

111 அதிகாரிகள் பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர்களாகவும், பொலிஸ் சார்ஜன்ட் சாரதி பதவியில் இருந்து உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு 08 அதிகாரிகளும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி பதவியில் இருந்து பொலிஸ் சார்ஜன்ட் சாரதி பதவி வரை 06 அதிகாரிகளும் பதவி உயர்வு பெற்றவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜன்ட் பதவி வரை 495 அதிகாரிகள் உயர் நிலை பெற்றுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையில் ஒரே தடவையில் அதிகளவானோர் பதவி உயர்வு பெற்றுள்ளமை இதுவே முதன்முறையாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.