யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு பின் அடுத்த 6 மாதங்களுக்கு இடை நிறுத்தப்படவுள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் மேலதிகமாக 33 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து செல்கின்ற யாழ் ராணி தற்பொழுது வவுனியா வரையில் பயணிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் சென்று ரயிலில் கொழும்பு செல்ல விரும்புவோருக்காக வவுனியா – அனுராதபுரத்திற்கு இடையில் 20 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபட உள்ளன.

தற்பொழுது 38 குளிரூட்டப்பட்ட பஸ்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக கொழும்பிற்கு சேவையில் ஈடுபடுகின்ற நிலையில், மேலதிகமாக 33 பஸ்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுமாறு அவற்றின் உரிமையாளர்கள் கோரப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.