நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேபாள நாட்டில் பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 68 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.

விமானம் ஓடுபாதையில் செல்லும்போது விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், விமானம் முழுவதும் தீப்பிடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.

விமானத்தில் இருந்து 68 பயணிகள், நான்கு விமான ஊழியர்கள் என 72 பேரின் நிலைமை கவலைக்குரியதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.