மேல் மாகாணத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிள் கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடாக இருக்கின்றது.
இந்நிகழ்வினை கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் மற்றும் கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிள் இணைந்து நடத்த முன் வந்துள்ளது.
கம்பஹா , கொழும்பு , களுத்துறை போன்ற மேல் மாகாண மாவட்டங்களில் இருந்து சுமார் 116 மாணவ மாணவியர்கள் இவ்விழாவிற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
இவர்களுக்கான பணப்பரிசு, பொற்கிலி , பொன்னாடை , கல்வி உபகரணம் , சான்றிதழ் , பதக்கம் போன்றவை வழங்கப்பட இருக்கின்றது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி காலை 8:30 மணியளவில் நடைபெற இருக்கும் இவ் விழாவிற்கு
பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக நியமனம் வழங்கப்பட்ட பிரபல்ய ஜனாதிபதி சட்டத்தரணி ஹாஜி பாய்ஸ் முஸ்தபா அவர்களும் கௌரவ அதிதியாக டொக்டர் ஷாபி சிஹாப்தீன் அவர்களும் சிறப்பு பேச்சாளராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் அர்கம் நூராமித் அவர்களும் , அபிவிருத்திக்கும் பயிற்சிக்குமான இலங்கை நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய் S.L.நௌபர் அவர்களும் , சிறப்பு அதிதியாக கொழும்பு ஸாஹிரா கல்லூரி அதிபர் றிஸ்வி மரிக்கார் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முற்றுமுழுதாய் பொறுப்பாளர்களாக விளங்கும் ஹாஜி முகர்ரம் மற்றும் முபீல் ஆகியோரை இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூறிக் கொள்கிறோம்.
விஷேடமாக கொழும்பு ஸாஹிரா கல்லூரி பேண்ட் வாத்தியங்களுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசிப்பதற்கான முக்கிய நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் (28) காலை 10.30 மணியளவில் முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கிள் மண்டபத்தில் நடைபெற்றது.