ஹெரோயின் போதைப்பொருளை நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை கடற்கரை வீதி பகுதி மக்பூலியா சந்திக்கருகில் சந்தேகத்திற்கிடமாக நபர் நடமாடுவது தொடர்பில் இரவு விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தமைக்கமைய இச்சோதனை நடவடிக்கையை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டனர். 

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக விற்பனை செய்த 22 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வசம் இருந்து 1 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் விசேட அதிரடிப்படையினரால் மீட்டுள்ளது.

 பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்கள் யாவும் பெரிய நீலாவணை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

-அம்பாறை நிருபர் ஷிஹான்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.