நானுஓயா ரதல்ல விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் பூதவுடல்  இன்று நல்லடக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது, உயிரிழந்த முச்சக்கரவண்டி  சாரதியின் சடலம் நேற்றிரவு 8 மணியளவில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

நானுஓயா AAD பிரிவைச் சேர்ந்த 25 வயதான சண்முகராஜ் (குட்டி )யின் பூதவுடல் அவரது கிளாசோவிலுள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று பி.ப 2:30 மணியளவில் நானுஓயா கிளாசோ AAD பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நானுஓயா நிருபர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.