‘பலூன்’ சின்னத்தில் களமிறங்கும் ‘அரகலய’ மக்கள் இயக்கம்

  Fayasa Fasil
By -
0



உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ‘அரகலய’ மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று ‘பலூன்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

கொழும்பில் முதலில் அதிகாரத்தை நிலைநாட்டுவதும், அதன் பின்னர் அமைப்பை மாற்றுவதும் குழுவின் நோக்கம் என்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்வலர் தனீஷ் அலி கூறினார்.

ஸ்ரீலங்கா சோசலிச கட்சியின் செயலாளர் மகிந்த தேவகே இந்த குழு தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வெற்றிகரமாக செலுத்தியுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கட்சி செயற்பாட்டாளர்கள் குழுவை ஆதரிப்பதாகவும், கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அவர், கொழும்பு அரகலயவுக்கு சொந்தமானது என அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)