ஆதிவாசி பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு

TestingRikas
By -
0
இந்நாட்டில் ஆதிவாசிகள் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ தலைமையிலான ஆதிவாசி பிரதிநிதிகள் குழு அன்மையில்  (17) பாராளுமன்றத்திற்கு சமூகமளித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்தித்தனர்.

தற்போது ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வருவதோடு, அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு பல்வேறு தடைகளும் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பான விடயங்களை வன்னில எத்தோ தலைமையிலான குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

தற்போது வசிக்கும் இனக்குழுக்களில் ஆதிவாசிகள் மிகவும் பழமை வாய்ந்த பழங்குடியினர் என அறியப்படுகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)