சுதந்திர மக்கள் முன்னணியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது.

அண்மையில் உத்தர லங்கா கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உட்பட 12 கட்சிகள் ஹெலிகொப்டர் சின்னத்தில் சுதந்திர மக்கள் கூட்டமைப்பை உருவாக்கின.

கூட்டமைப்பின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று மாலை 6.00 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிப்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியில் இருந்து விலகி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.