காசோவரி என்ற இந்த பறவைதான் உலகின் மிகவும் ஆபத்தான பறவை இனமாக வகைப்படுத்தப்படுகிறது. மனிதனை ஓட ஓட துரத்தி கொல்லும் திறன் கொண்ட இது, ஒரு உதை மூலம் மனிதனின் எலும்புகளை உடைத்துவிடும், அல்லது ஒரு கொத்து கொத்தினால் குத்து வாளால் குத்தியது போன்று இருக்கும். 

அதன் (மூட்) மனநிலை எப்போதும் நல்லமுறையில் இருக்காது. ஆக்ரோஷ தன்மை கொண்ட இப்பறவை நாய்களை தாக்கும், மிருகங்களுக்கு பயப்படாது, கண்ணாடியை கண்டால் குத்தி உடைக்கும். 

இப்பறவை இன பெண் பறவையின் விநோதங்களில் ஒன்றுதான், அது காணும் எந்த ஆண் பறவையாக இருந்தாலும் சரி, அதன் அருகில் முட்டையிட்டுவிட்டு அதன் பாட்டில் சென்றுவிடும். ஆண் பறவையை  பொறுத்தவரை  9 மாதங்கள் முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்கும். அந்த பெண் பறவை வேறு ஆண் பறவை நாடிச் சென்று இனச்சேர்க்கை செய்யும். 

இதன் குஞ்சுகளுக்கு தாய் பாசம் கிடைப்பதில்லை. இதனால்தான் இப்பறவை முரட்டுத்தனமான குணம் கொண்டாதாக இருக்கலாமென பறவையியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

பறக்காத, பெரும் எடையை கொண்ட இது தீக்கோழிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக எடை கொண்ட பறவையாக கருதப்படுகிறது. பார்க்க அழகாகவும் அடக்கமாகவும் காணப்பட்டாலும் அருகில் நெருங்கினால்தான் உதை அல்லது குத்து காத்திருக்கும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.