சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலய மாணவி சன்ஹாவின் முன்மாதிரியான செயற்பாடு

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ். )வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவி ஏ.பாத்திமா சன்ஹா மரியம்   தனது பிறந்த நாள் தினத்தின் ஞாபகார்த்தமாக தனது சக மாணவ நண்பர் நண்பிகளுக்கு இனிப்புகள் வழங்குவதைத் தவிர்த்து பாடசாலையில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்களை  அன்பளிப்பு செய்துள்ளார்.

நூல்களை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ்  , உதவி அதிபர் எம்.ஏ.சீ.எல்.நஜீம் , ஆசிரியர்கள் மற்றும் சக வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அஸ்ஹர் இப்றாஹிம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.