கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா ரத்வத்த பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு நேற்று (25) காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், அவர் கறுப்புக் கோடு போட்ட சட்டை மற்றும் கறுப்பு காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.