போதைவஸ்து பாவனை மற்றுமொரு அப்பாவி தாயின் உயிரை காவு கொண்டுள்ளது. 
வீட்டு வேளைக்கு சேர்ந்த முர்சிதா என்ற பெண்ணின் கைவரிசை.
வெள்ளம்பிட்டி லன்சியாவத்தையில் கடந்த தைப்பொங்கல் இரவு (15)  கொலன்னாவை பள்ளிவாசலின் செயலாளரும் கொலன்னாவை மஸ்ஜிதுகள் சம்மேளன தலைவருமான ஃபெரோஸ் ஹாஜியின் சகோதரி நாதிரா என்ற 62 வயதுடைய  தாய் கழுத்து நெரிக்கப்பட்டு   கொலை செய்யப்பட்ட பிறகு வீட்டில் இருந்த பெருந் தொகையான நகைகளும் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
முர்சிதா என்பவர் இஸ்லாத்தை தழுவிய ஒருவரும் வீட்டு வேளைக்கு சேர்ந்து சிறிது காலமாம். அவர் திருமணம் செய்தவர் என்றும் அவரின் கணவர் ஐஸ் போதை பொருளுக்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகின்றது.
கொலை நன்கு திட்டமிடப்பட்டதாகவே செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
கொலை நடந்த தினத்தில் குறித்த தாயும் அவரின் சிறுவயது இரு பேரப் பிள்ளைகளுமே இருந்துள்ளனர் குறித்த தாயின் ஒரு மகன் ஜமாத் வேளைக்கு சென்றுள்ளதாகவும் மற்றய 
மகளும் மருமகனும் இந்தியாவுக்கு சென்ற சமயத்தில் வேலைக்காற பெண்ணும் அவரின் ஐஸ் போதைவஸ்து கணவரும் சேர்ந்தே இந்த அநியாயத்தை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தாயின் ஜனாஸா இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வீட்டு வேளைக்கு ஆட்களை வைத்திருப்பவர்கள் மிக அவதானத்துடன் இருப்பதுடன் முடியுமான வரை வேலைக்கு ஆட்களை வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது. 
வீட்டு வேளைக்கு ஆட்களை வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது என நான் எனது முகநூலில் பதிவிட்டு இருந்ததை ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.
இனியும் இவ்வாறான தவறுகளை விடாது சாதுர்யமாக நடந்தால் பல சதிநாசகார வேளைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
கொலையாளிகள் தலைமறைவானாதால் பொலிஸார் அவர்களை தேடி வலை விரிந்துள்ளனர்.

(ஜாவித்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.