சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மூன்று மாத காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக டபிள்யூ. சமரதிவாகர நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.