எதிர்வரும் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நேற்று (ஜனவரி 27) அனுராதபுரத்திற்கு விஜயம்செய்த போது செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த, 

திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட்டால், வரவிருக்கும் தேர்தலுக்கு தனது கட்சி தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகியமை தேர்தலை தாமதப்படுத்தும் சூழ்ச்சியா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர், 

தேர்தலை ஏன் தாமதப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார். 

மேலும், எதிர்க்கட்சிகள் பலமாக இருக்கலாம் என்ற சமீபத்திய கூற்றுகள் பற்றி கேட்கப்பட்டபோது, 

இந்த கூற்றுக்கள் 'சில நபர்களால்' மட்டும் உருவாக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார், அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பலமான கட்சியாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள் என்றார்.

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்கப்பட்டபோது,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன "எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது" என்று வலியுறுத்தினார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.