மேலதிக வகுப்பு கட்டடத்துக்கு அண்மையில் உள்ள மின் கம்பியை தொட்டதில் இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்

  Fayasa Fasil
By -
0




குளியாபிடிய பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடம் ஒன்றிற்கு அருகில் உள்ள உயர் அழுத்த  மின் கம்பியை தவறுதலாக தொட்டதில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குளியாபிட்டிய நகர மண்டபத்திற்கு பின்புறம் மேலதிக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்த கட்டடத்துக்கு குழாய்களை கொண்டு  சென்ற  பயிற்சி வகுப்பில் பணியாற்றும் 28 வயதுடைய விமுக்தி தில்ஷான் பெரேரா என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)