தியவன்னா ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த 18 வயது இளைஞனின் சடலம் படகு விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராஜகிரிய புத்கமுவ பிரதேசத்தை சேர்ந்த சயுர கிம்ஹான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் மேலும் ஐந்து இளைஞர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

இதன்போது உயிரிழந்த இளைஞன் மற்றுமொரு இளைஞனுடன் தியவன்னா ஓயாவின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதேநேரம் மற்றைய இளைஞன் நீந்தி கரைக்கு வந்து உயிர் பிழைத்துள்ள நிலையில் இந்த இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போனார்.

தரையில் இரு இளைஞர்களையும் நீந்தி கரைக்கு வந்த இளைஞரையும் கடற்படையினர் கைது செய்து தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த மேலும் இரு இளைஞர்கள் தப்பி ஓடியதாக மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.