தனது தனித்துவமான ஆரம்பப் பிரிவுக்கான கல்விப் பயணத்தை 2013 இல் ஆரம்பித்து வீறு நடைபோடும்  எமது
அல் முபாரக் கனிஷ்ட வித்தியாலயம்  அதன் இமாலய சாதனைகள் மூலம் மகிழ்வுறும் இத்தருணத்தில் கடந்த பத்து வருடங்களுள் இரண்டாவது மாபெரும் கண்காட்சியையும் கலை நிகழ்ச்சியையும் விசேட சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டு வைத்ததுடன் களியாட்ட வினோத நிகழ்சிகள், மாயாஜால காட்சிகள், மாணவர்களது கலை நிகழ்சிகள், மாணவர்களது வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் குறுகிய கால இடைவெளிக்குள் நடாத்தி முடிக்கப்பட்ட வாசிப்பு மாத  விசேட போட்டிகள் அதன் பரிசளிப்பு தசாப்த விழா போட்டிகள் அதன் பரிசளிப்பு மாணவர்களது தாள வாத்திய இசை கண்காட்சி BAND DISPLAY அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வீட்டுத்தோட்டம்  மூலிகை தோட்டம் ஒட்டுச்சித்திரம் போன்றன போன்றன காட்சிப்படுத்தப்பட்டன.

பத்து வருட நிறைவில்
அதிபர் ஆசிரியர் மாணவர்கள்
அபிவிருத்தி சங்கம் 
பெற்றோர்
நலன்புரி சங்கம்
என சகலரும் மனநிறைவடையும் வகையில் சகல நிகழ்வுகளும் இடம்பெற்றன

நலன்புரி சங்கத்தினரின் அயராத அர்ப்பணிப்பு சேவை பாராட்டத்தக்கது

குறிப்பாக இரண்டாம் நாள் நிகழ்வுகளில்

இதுவரை பணியாற்றி சேவையிலிருந்து ஓய்வு பெற்ற
முன்னாள் அதிபர் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர்
Mohamed Jazeem Sinna Lebbe அவர்களுக்கும்
பிரதி அதிபர்களான திருமதி ஆயிஷா ஹுஸைனா மற்றும் நிஸ்ரியா
மற்றும் சிரேஷ்ட ஆசிரியை ஸைன் பாத்திமா அவர்களதும் இடைவிடாத சேவையைப்பாராட்டி
அணைகடந்த
வெள்ளப்பெருக்கு போல பாய்ந்து
பெருந்திரளாக குழுமியிருந்த ஊர்மக்களை முன்னிருத்தி 
நினைவுச்சின்னம்
வழங்கப்பட்டு
பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கப்பட்டமை
நிகழ்வின் விசேட அம்சமாகும் 

 

 

மிகவுமே குறுகிய காலத்தில் இந்த சாதனையை நிகழ்த்துவதில் மும்முரமாக இருந்த அதிபர் தலைமையிலான ஆசிரியர் குழாம் முன்னாள் மற்றும்  இந்நாள் அபிவிருத்தி சங்கம் பெற்றோர் நலன்புரி சங்கம்  தனவந்தர்கள் அனுசரணையாளர்கள் சமுக சேவை நிறுவனங்கள்  என பலரையும்  பெயர் கூற மறந்து விடுபட்ட சகல் தரப்பினர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்..

Ashsheik Bisthamy Ahamed 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.