2023ஆம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில்  இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான பாதையில் செல்லும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

 ஒட்டுமொத்தமாக, 2024 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சி விகிதம் படிப்படியாக அதிகரித்து, இந்த ஆண்டு பொருளாதாரம் மிதமான அளவில் மீண்டு வரவும், பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு சாதகமான சூழலை உருவாக்கவும் வழிவகை செய்யும் என மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

 பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் அதன் ஆற்றலைப் பயன்படுத்தவும் கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு அரசாங்கமும் மற்ற கொள்கை வகுப்பாளர்களும் உறுதியளிக்க வேண்டும் என்று மத்திய வங்கி மேலும் வலியுறுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.